ஜோதிகா இடுப்பு எடுக்க 3 நாள் ஆச்சு… குஷி படத்தின் ஸ்வாரஸ்யத்தை கூறிய எஸ். ஜே சூர்யா!

Author: Shree
16 August 2023, 10:19 am

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் குவித்து வெற்றி பெற்ற திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருப்பார். இவர்களது கெமிஸ்ட்ரி இப்படத்தில் அவ்வளவு அற்புதமாக இருந்தது. இன்றும் இப்படத்தை டிவியில் திரையிட்டால் குடும்பமே ஒன்றாக அமர்ந்து பார்ப்பார்கள்.

எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜயகுமார், ஷில்பா ஷெட்டி, மும்தாஜ், விவேக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் மற்றும் ஜோதிகா இருவரும் ஒரே காலேஜில் படிப்பார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து நண்பர்களின் காதலுக்கு உதவி செய்வார்கள்.

அந்த சமயத்தில் இவர்களுக்கிடையே நட்பு உருவாகி அதுவே காதலாகிவிடும். ஆனால் அதை வெளிப்படையாக சொல்லிக்கொள்ளாமல் மறைமுகமாக காதலிப்பார்கள். பின்னர் possessive’வினால் வரும் மோதல்களால் இவர்கள் பிரிய நேரிடும். பின்பு ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் தவித்து வருவார்கள்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இவர்கள் குடும்பத்தின் சம்மதத்துடன் ஒன்று சேரும் காட்சியில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் ஓடி வந்து பின்னர் விஜய் ஜோதிகாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்திருப்பார். இந்த காட்சி அப்போதே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த லிப்லாக் காட்சியில் நடிக்க விஜய் – ஜோதிகா இருவருமே யோசித்து தயங்கியுள்ளனர். அதன் பின் SJ சூர்யா தான் இது படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என கூறி சம்மதித்தாராம். அவர் சொன்னது போலவே ஹிட் அடித்தது.

சொல்லப்போனால் எதிர்ப்பத்தைவிட மிகப்பெரிய வெற்றி பெற்றதால் எஸ்ஜே சூர்யாவுக்கு தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய தொகையை கொடுத்து மகிழ்ச்சி படுத்தினார்களாம். ஆனால், எஸ்ஜே சூர்யா மட்டும் மகிழ்ச்சி அடையாமல் இதற்காக கடுமையாக உழைத்த உதவி இயக்குநர்களுக்கு 7 பைக் வாங்கி கொடுத்துள்ளார். அதில் ஏ. ஆர் முருகதாஸ், நடிகர் மாரியப்பன் உள்ளிட்டோருக்கும்கொடுத்தாராம். அந்த பைக்கை இன்னும் நான் வைத்திருப்பதாக நடிகர் மாரிமுத்து பேட்டி ஒன்றில் கூறி எஸ்ஜே சூர்யாவின் நல்ல மனசை பாராட்டினார்.

SJ Surya at Iraivi Press Meet

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் குறித்து பேசிய எஸ். ஜே சூர்யா, எனது வித்யாசமான முயற்சிகளும் கடின உழைப்புகளும் தான் இன்று வாய்ப்பு கதவு தட்டுகிறது. முன்பெல்லாம் நான் கதவு தட்டி வாய்ப்புக்கேட்டேன். இப்போது என்னை தேடி வருவது பெரிய பாக்கியம் தான். குஷி படத்தில் அந்த இடுப்பு சீன் எடுக்கவே 3 நாட்கள் எடுத்துக்கொண்டேன். பிளைட் போகும் அந்த சீனுக்காக ஒரு நாள் முழுக்க வெயிட் பண்ணி எடுத்தேன். பின்னர் எல்லாமே அந்த சவுண்ட் வச்சி சரி பண்ணிக்கிட்டோம். எல்லோரும் என்னடா இவன் க்ளோசப் சீனுக்கே 3 நாள் எடுக்குறான்னு திட்டினாங்க. ஆனால், அந்த பொறுமையான உழைப்பு தான் இன்று வரை எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது என கூறினார்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!