பிரபல ஹீரோவுக்கு தந்தையாக நடிக்கும் எஸ்ஜே சூர்யா.. மருமகளை காதலிக்கும் கதையா?
Author: Udayachandran RadhaKrishnan11 March 2025, 2:03 pm
தமிழ் சினிமாவில் தற்போது சின்ன பட்ஜெட் படங்கள் பெரும் வெற்றியை ருசிப்பார்த்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் 35 கோடியில் எடுக்கப்பட்டது.
இதையும் படியுங்க: கோப்பையை தூக்கி குப்பையில் வீசுங்கள்… முன்னாள் பாகிஸ்.வீரர் சர்ச்சை பேச்சு.!
ஆனால் படம் பெரும் வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்து வருகிறது. இதனால் சின்ன சின்ன பட்ஜெட் படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படம் மூலம் முன்னணி நடிகராக மாறியுள்ளார். இதனால் அவரது படத்திற்கு எதிர்பார்ப்புகள் குவிந்து வருகின்றன,
குறிப்பாக விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படமான LIK படத்தில் எஸ்ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, கௌரி ஜி கிணான், மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நயன்தாரா, எஸ்எஸ் லலித் தயாரிப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தின் கதை குறித்து இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

அதாவது, எஸ்ஜே சூர்யா தந்தையாகவும், மகனாக பிரதீப் ரங்கநாதனும் நடிப்பதாக, மகன காதலிக்கும் பெண்ணை தந்தையான எஸ்ஜே சூர்யா காதலிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.
