கடவுள், அம்மா, அப்பா அப்புறம் அஜித் சார் தான் – மேடையில் மனம் நெகிழ்ந்த பிரபல ஹீரோ!

Author: Shree
7 October 2023, 4:19 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித். இவர் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாக பார்க்கப்படுகிறார். மற்ற நடிகர்களை போன்று படங்களில் நடித்துவிட்டு அதை வித விதமாய் ப்ரோமோஷன் செய்வதெல்லாம் அஜித்திற்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று. பொய்யாக வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றி படம் பார்க்க வைத்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கவே மாட்டார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு சரி அதன் பின்னர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கோ, நேர்காணலுக்கோ, பொது விழாக்களிலோ அஜித்தை பார்க்கவே முடியாது. ஒரு படம் முடித்துவிட்டால் ட்ரிப் சென்றுவிடுவார். இல்லையெனில் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் , கார் ரேஸ் ட்ரோன் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செல்வது தான் அஜித்தின் வழக்கமான பழக்கங்களில் ஒன்றாக பார்க்கிறோம். படங்களில் நடிப்பதோடு சரி அதன் பிறகு எந்த ஒரு பப்ளிசிட்டியையும் விரும்பாத சாதாரண மனிதராகவே நடந்துக்கொள்வார்.

மொத்தத்தில் மிகச்சிறந்த நடிகராகவும், மிகச்சிறந்த மனிதராகவும் பார்க்கப்படும் அஜித் எந்த ஒரு சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் படத்திற்கு படம் தனது திறமையை காட்டி வாழ்க்கையை செதுக்கி செதுக்கி உருவாக்கினார். நேர்மையாக உழைத்து சம்பாதித்து வைத்திருக்கும் அஜித் குறித்து பல பிரபலங்கள் பல ஆச்சர்யமான உண்மை சம்பவங்களையும் அவருடன் பழகிய நாட்களை குறித்தும் பேட்டிகளில் கூறியுள்ளனர்.

அந்தவகையில் தற்போது பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ். ஜே சூர்யா விருது விழா ஒன்றில், கடவுள், அம்மா, அப்பா அப்புறம் அஜித் சார் தான் என மிகவும் நெகிழ்ச்சியோடு பேசினார். அதற்கான காரணத்தையும் கூறிய அவர், அஜித் சார் ரொம்ப தங்கமான மனசு கொண்டவர். வாலி படத்தின்போது நான் இருந்த நிலைமையை பார்த்து வேறு யாராவது இருந்திருந்தால் என் கிட்டகூட நெருங்கியிருக்கவே மாட்டாங்க. பட்டன் இல்லாத சட்டை, ஊக்கு போட்ட செருப்பு என பார்க்கவே ரொம்ப மோசமா இருந்த என்னை பற்றி அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவே மாட்டார்.

தோல் மேல் கைபோட்டுக்கொண்டு இவர் தான் என் டைரக்டர் என எல்லோரிடமும் சொல்லுவார். அப்படி சொல்லி என்னை comfort ஜோனுக்கு கொண்டுச்செல்வார். அந்த இடத்தில் நானாக இருந்திருந்தால் அஜித் சார் மாதிரி பெருந்தன்மையாக நடந்திருப்பேனா என்று தெரியவில்லை. அஜித் சார் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது. அவர் தான் என்னோட வாழ்வில் விளக்கு ஏற்றி வைத்தவர். அவர் கொடுத்த வாழ்க்கை தான் நான் இப்போ இந்த இடத்தில் இருக்கிறேன் என கண்கலங்கியபடி கூறி உருக்கமாக பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/shorts/C4biGMI8OpA
  • fear was more when doing ajith project அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…