மெகா ஹிட் படங்களை இயக்கி கூட அவ்வளவு வசதி இல்ல… நடிகர் ஆனதும் கோடியில் புரளும் SJ சூர்யா – சொத்து மதிப்பு!

Author: Shree
20 July 2023, 10:49 am

வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரவைப்பவர் எஸ்ஜே சூர்யா. திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி , நியூட்டனின் மூன்றாம் விதி , இறைவி , மெர்சல் , மாநாடு , டான் , வாரிசு என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லனாக அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரது மனதிலும் அழுத்தமாக நின்றுவிடும். தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களுக்கு பிரபலமானவராக பார்க்கப்படுகிறார். கடைசியாக பொம்மை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆரம்பத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் நடிகராக ஒரு சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பரீட்சியமான எஸ்ஜே சூர்யா சமீப நாட்களாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோக்களை வெளுத்து வாங்கி வருகிறார். எனவே அடுத்தடுத்த படங்ககளில் நடிக்க அவருக்கு நல்ல நல்ல ரோல்கள் தேடி வருகிறது.எனவே இயக்குனராக சம்பாதித்ததை விட நடிகராக பல கோடி சம்பாதிக்கிறாராம்.

sj surya 1

ஒரு படத்திற்கு ரூ. 5 முதல் ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கும் எஸ்ஜே சூர்யாவுக்கு ஒரு ஆண்டிற்கு 40 முதல் 50 கோடி வரை வருமானம் குவிக்கிறதாம். சென்னை பங்களா வீடு, சொத்து, சொகுசு கார் என திருமணம் செய்யாமேல் முரட்டு சிங்கிள் பணக்காரராக வாழ்ந்து வருகிறாராம் எஸ்ஜே சூர்யா. தற்போது அவருக்கு வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 364

    0

    0