கொழுகொழுவென இருக்கும் இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா.. அட இவங்க சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆச்சே..!
Author: Vignesh26 March 2024, 4:56 pm
பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அந்தவகையில், பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சிலரது சிறுவயது புகைப்படங்களை பார்த்தாலே அவரா இது என கேட்க தோன்றும் அந்த அளவுக்கு குழந்தை பருவ போட்டோவில் அடையாளம் தெரியாமல் இருப்பார்கள். அப்படித்தான் தற்போது, நடிகை ருக்மணி வசந்தின் குழந்தை பருவ போட்டோ வைரல் ஆகி வருகிறது. தற்போது, சிவகார்த்திகேயனின் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் எஸ்கே 23 படத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் ருக்மணி வசந்த், கன்னட நடிகையான ருக்மணி வசந்த் தமிழில், ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.