சிவாஜி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை..படாத பாடுபடும் “பராசக்தி” திரைப்படம்.!

Author: Selvan
11 February 2025, 4:02 pm

தொடரும் ‘பராசக்தி’ டைட்டில் பிரச்சனை

சிவாஜிகணேசன் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் சென்னை மாநகர் முழுவதும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை எதிர்த்து,போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உருவாகி வரும் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார்.இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி,அதர்வா,ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதையும் படியுங்க: ‘விடாமுயற்சி’ பிரேக்டவுனா….மந்தமான 5-ம் நாள் வசூல்…!

ஒரு கல்லூரி மாணவனின் உண்மையை கதையை மையமாக வைத்து,ஹிந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் உருவாகி வருகிறது.படக்குழு இப்படத்திற்கு பராசக்தி என்று தலைப்பை வைத்தார்கள்,அதேபோல விஜய் ஆண்டனியும் தன்னுடைய 25-வது படத்திற்கு தமிழில் சக்திதிருமுகன் என்றும் தெலுங்கில் பராசக்தி எனவும் வைத்தார்.

Parasakthi Title Controversy

இதனால் இரண்டு படக்குழுவிற்கு பட டைட்டில் வைப்பதில் சிக்கல் எழுந்தது,சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தை தயாரித்த AVM நிறுவனம் இரண்டு படக்குழுவிற்கு படத்தின் தலைப்பை வைக்க சம்மதம் தெரிவித்தது,ஒருவழியாக இந்த டைட்டில் பிரச்சனை ஓய்ந்துவிட்டது என பெரு மூச்சு விட்ட நேரத்தில்,தற்போது சிவாஜிகணேசனின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் சென்னை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதில் “நூறு ஆண்டுகள் ஆனாலும் ஒரே பராசக்தி தான்”என்ற வசனத்தோடு சிவாஜிகணேசனின் பராசக்தி போஸ்டரை ஒட்டி சிவகார்த்திகேயன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,அண்ணாமலை பல்கலைக்கழக்தில் மும்மரமாக படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் SK-25 படக்குழுவிற்கு மேலும் தலைவலி பிரச்சனை வந்துள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!