விஜய் மாமா சிகரெட் பிடிக்காதீங்க.. – வாயில பெரிசா வந்து ரத்தம் வரும்.. அட்வைஸ் செய்த சிறுவன்..! (வீடியோ)

Author: Vignesh
23 June 2023, 7:15 pm

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியானது. இதை அடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

leo-updatenews360

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் பிறந்தநாளுக்கு இப்படத்தில் இடம்பெறும் ‘நா ரெடி’ என்ற பாடல் ஜூன் 22ம் தேதி வெளியிடப்படும் என புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்திருந்தது.

அதையடுத்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் 20 செகண்ட்ஸ்க்கு ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ‘நா ரெடி’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் குரலில் சினம் கொண்ட சிங்கத்த சீண்டாதப்பா என்ற வரிகள் வேற லெவல் எனர்ஜியை கொடுத்திருந்தது.

Vijay - Updatenews360

பாடல் வைரலானாலும் சில விமர்சனத்தையும் பெற்று வருகிறது. மேலும் பாடல் வரிகளில், புகையிலை வெட்டிக்கோணி பையில் என பல மோசமான வரிகள் இருந்துள்ளது. விஜய் அந்த பாடல் வரிகளை பாடவில்லை என்றாலும், அவரை சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

இந்நிலையில், சிறுவன் ஒருவன் லியோ படத்தின் போஸ்டரை பார்த்து பின்னால் சிங்கம், நெருப்பு, முன்னால் விஜய், வாயில் சிகரெட், துப்பாக்கில் இருந்து புகை என பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மேலும், அந்த வீடியோவில் சிறுவன் விஜய் மாமா சிகரெட் எல்லாம் பிடிக்கக்கூடாது தப்பு.. வாயில பெருசா வந்து ரத்தம் வரும், சாப்பிட முடியாது, என்று கூறியபடி ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 386

    0

    0