“விடாமுயற்சி”விலகலால் பொங்கலுக்கு போட்டி போடும் சிறிய படங்கள்…முந்திக் கொண்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Author: Selvan
1 January 2025, 7:58 pm

விடாமுயற்சி தாமதத்தால் மற்ற படங்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ் ரசிகர்ளிடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தொழில்நுட்ப வேலைகள் இன்னும் முடியாத காரணத்தால் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகாது என தயாரிப்பு நிறுவனமான லைக்கா நேற்று அறிவித்தது.

இதையும் படியுங்க: கையில் தூக்கு வாளி…கழுத்தில் துண்டு…புத்தாண்டு விருந்து அளித்த இட்லி கடை..!

இதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.புது வருடம் அதுவுமா இப்படி ஏமாற்றத்தை கொடுத்திட்டிங்களே என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.அஜித் ரசிகர்கள் ஒரு புறம் கவலையில் இருக்க மறுபுறம் இதா நல்ல சான்ஸ்-னு சிறிய பட்ஜெட் படங்கள் எல்லாம் போட்டி போட்டு பொங்கல் அன்று ரிலீஸ் தேதியை அறிவிப்பு செய்து வருகிறது.

Vidamuyarchi delay small budget films release

அந்த வகையில் மலையாள நடிகர் ஷேன் நிகம் மற்றும் கலையரசன் நடித்திருக்கும் மெட்ராஸ்காரன் திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.மேலும் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டி நடிப்பில் உருவாகி இருக்கும் படைத்தலைவன் படமும் பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சிபிராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள 10ஹவர்ஸ் படமும் பொங்கலை குறிவைக்கிறது.அஜித்தின் விடாமுயற்சி படம் பின் வாங்கியதால்,இதான் நல்ல நேரம் என சிறு படங்கள் எல்லாம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.

Bala Vanangaan movie Pongal release

ஏற்கனவே ஷங்கரின் கேம் சேஞ்சர் மற்றும் பாலாவின் வணங்கான் படம் பொங்கல் அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது இந்த சிறு பட்ஜெட் படங்களும் இணைந்துள்ளதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!