பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!
Author: Udayachandran RadhaKrishnan31 January 2025, 7:52 pm
அண்மையின் மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இதையும் படியுங்க: பேத்தி மாதிரி… 4 வயது குழந்தைக்கு… விவசாயி செய்த கொடூரம் : அதிரடி தண்டனை!
ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த 24ஆம் தேதி வெளியானது. கடன் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இளைஞருக்கு திடீரென வேலை பறிபோகிறது.

இதையடுத்து அவர் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். அதன் பின் அவர் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்களே குடும்பஸ்தன் படத்தின் கதை.

நல்ல கதை, திரைக்கதை என்பதால் படத்திற்கு வரவேற்பு குவிந்து வருகின்றன. வெளியாகி ஒரு வாரத்தில் ₹11.7 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.