விஜய்யுடன் இன்னும் ஒரே ஒரு நாள் தான்.. ‘கோட்’ படத்தை பற்றி சினேகா கொடுத்த அப்டேட்..!

Author: Vignesh
14 June 2024, 12:55 pm
sneha
Quick Share

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

Goat vijay

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். இந்நிலையில், டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. GOAT படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இப்பட பணிகள் முடிந்த பிறகு தனது 69 ஆவது படத்தில் நடிக்க உள்ள தளபதி விஜய் அந்த படத்தோடு தனது சினிமா வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்து விட்டு முழு நேர அரசியல் களம் இறங்க உள்ளது அனைவரும் அறிந்த விஷயமே. இந்நிலையில், விஜயின் 68 மற்றும் 69 ஆவது ஆக இரு திரைப்படங்களும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்பட பணிகள் ஏறத்தாழ 60% முடிவுற்ற நிலையில், தற்போது, கோட் படக்குழு அமெரிக்காவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

Vijay - Updatenews360

மேலும் படிக்க: யாரையும் நம்பிறாதீங்க.. மருத்துவமனையில் இருந்து திடீர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து மனைவி..!

விரைவில், இப்பட பணிகள் முடிவடைந்து தளபதி விஜயின் கோட் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, லியோ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா முதலில் மலேசியாவில் நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அதன் பிறகு சென்னையில் நடத்த திட்டமிட்டு இறுதி நேரத்தில் அதற்கு உரிய அனுமதி கிடைக்காத காரணத்தால் இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை. இருப்பினும் திரைப்பட இசை வெளியீட்டு விழா முன்கூட்டியே நல்ல திட்டமிடலோடு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா அல்லது சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளில் ஒரு இடத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் விஜய் அடுத்ததாக கூற இருக்கும் குட்டி ஸ்டோரியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Vijay - Updatenews360

மேலும் படிக்க: தம்பி ஓடாத நில்லு.. மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்..!(Video)

இந்நிலையில், கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு சில கண்டிஷன்களை போட்டுள்ளதாம். அதாவது, ஆரம்பத்தில் தி கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 55 கோடிக்கு கேட்டு பல கெடுபிடிகளை படத்திற்கு விதித்ததாம். அதாவது, படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவோம் என்றும், நாங்கள் சொல்லும் தேதியில் தான் படத்தை வெளியிட வேண்டும் என்றும், படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் இருக்கக் கூடாது என்றும், அடுக்கடுக்கான கண்டிஷன்களை போட்டிருக்கிறது.

Vijay - Updatenews360

இதற்கு, தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் ஓகே சொல்லிவிட்டதாம். ஆனால், இதன்பின் மற்றொரு இறுதி கண்டிஷன் ஆக சன் டிவிக்காக நடிகர் விஜய் இரண்டு மணி நேரம் ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டதற்கு நடிகர் விஜய் கொஞ்சம் கூட யோசிக்காமல் நோ சொல்லிவிட்டாராம். இதனால், கடுப்பான சன் பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை ரத்து செய்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து தற்போது ஜி நிறுவனத்திற்கு கோட் படத்தின் சேட்டிலைட் உரிமம் கை மாறி இருக்கிறதாம். இப்போதே இப்படி ஒரு சிக்கலை சந்தித்துள்ள விஜய் படத்தின் ரிலீஸ் போது என்னென்ன சிக்கல்களை சந்திக்க நேரிடுமோ என்று ரசிகர்கள் கதி கலங்கி உள்ளனர்.

இந்நிலையில், ஹாலிவுட் படங்களான அவதார், கேப்டன், மார்வெல், அவெஞ்சர்ஸ், என்ட் கேம் போன்ற படங்களுக்கு VFX செய்த குழுவினர் தற்போது, விஜய் நடிக்கும் கோட் படத்தின் காட்சிகளை அமைக்க உள்ளனர். இதன் மூலம் அந்நிறுவனம் கோலிவுட்டில் நுழைகிறது. இந்நிலையில், வெங்கட் பிரபு, கோட் படத்தின் முக்கிய VFX காட்சியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஆரம்பித்துள்ள ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேட்டி அளித்த சினேகா அப்போது, கோட்படத்தின் அப்டேட் பற்றி தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு சினேகா நன்றாக போய்க்கிட்டு இருக்கு எனக்கு இன்னும் ஒரு நாள் சூட் இருக்கு, தளபதியுடன் நான் இருக்கேன். எல்லா சீன்லையும் இருக்கேன் என்று படம் பார்த்துட்டு எப்படி இருக்கும் என்று நீங்கள் கூறுங்கள் என்று சினேகா தெரிவித்துள்ளார்.

sneha prasanna - updatenews360.jpg e
Views: - 58

0

0

Leave a Reply