“சந்திரமுகியா நான் நடிக்க வேண்டியது” … ஷாக் கொடுத்த சினேகாவை குசும்பு பண்ணும் ரசிகர்கள்!

Author: Shree
11 October 2023, 11:40 am

தமிழ் சினிமாவில் வெளிவந்த பேய் படங்களுக்கே தலைவர் ” சந்திரமுகி’ படம் தான். 2005ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மரணபீதியிலும் மகழ்ச்சி அடையவைத்தது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் 250 நாட்களையும் கடந்து, இத்திரைப்படம் 650 கோடி வரை வசூலை ஈட்டி திரையரங்குகளில் ஓடி மாபெரும் சாதனையை படைத்தது.

chandramukhi-updatenews360

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியாகியது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக வெளியான ‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

chandramukhi-updatenews360

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்த இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருந்தார். ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக வெளிவந்த இந்த திரைப்படத்தை ஜி.கே. எம். தமிழ்குமரன் தலைமை வகிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருந்தது.

அதிக பொருட்செலவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளிடையில் உருவாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த இப்படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை சினேகா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியபோது அவரிடம் தொகுப்பாளர், நீங்க மிஸ் பண்ண பெஸ்ட் படம்னா எது? என கேட்டதற்கு,

Sneha-Prasanna updatenews360

சந்திரமுகி படம் தான். அந்த படத்தில் ஜோதிகா ரோலில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டேன். என கூறி வருந்தினார். இதை கேட்ட தொகுப்பாளருக்கு மட்டுமில்ல ஒட்டுமொத்த சந்திரமுகி ரசிகர்களுக்கே அதிர்ச்சியாகிவிட்டது. நல்ல வேலை அதுல நீங்க நடிக்கல…. இல்லன்னா ஜோதிகா நடிப்பு இன்று சினிமா வரலாறு பேசும்படியாக இருந்திருக்காது என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 380

    0

    0