90-களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என்ற பெயரை எடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து டாப் இடத்தில் இருந்து வந்தார்.
திருமணம் குழந்தை
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சினேகா 2009ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்துள்ளார். அதன்பின் குடும்பத்தினர் சம்மதத்துடன் 2012ல் திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தனர். சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்து சினேகா மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். பிரசன்னாவும் வில்லன் ரோலிலும் இரண்டாம் கதாநாயகன் ரோலிலும் நடித்து வருகிறார். இப்படி 10 ஆண்டுகள் தங்களின் திருமண வாழ்க்கையை தொடர்ந்து வரும் பிரசன்னா, சில மாதங்களுக்கு முன் தங்களது 10 வது திருமணம் நாளை கொண்டாடி எமோஷ்னலாக ஒரு பதிவினை போட்டிருந்தார்.
சினேகா – பிரசன்னா விவாகரத்து
இந்நிலையில் 10 வருட திருமண வாழ்க்கையை விவாகரத்து மூலம் பிரிந்து விட்டதாக சினேகா – பிரசன்னா முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் பரவியது. தொலைக்காட்சி சேனல்களிலும் இந்த செய்தி வைரலாக இதற்கு பதிலடி கொடுக்கும் படி சினேகா கணவர் பிரசன்னாவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார். இதையும் நம்பாத சில ஊடகம் விவாகரத்து செய்தியை கொளுத்தி போட்டு வந்தது.
தற்போது சினேகாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, “முழுமுற்றும் புரளியே! இறையருளால் மகிழ்வான இல்வாழ்வும் முத்தான மக்களும் பெற்று இணைந்திருக்கிறோம். இணைந்தேயிருப்போம்…” என்று ஒரு பதிவினை போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது கணவர் பிரசன்னாவுடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து அனைத்து விவாகரத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ’வாழ்ந்தால் இப்படி வாழனும்’ என வாழ்த்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
This website uses cookies.