அஜித்தால் தர்ம சங்கடம் ஆயிருச்சு.. பல வாருடம் கழித்து உண்மையை வெளியிட்ட சினேகாவின் அக்கா..!

Author: Vignesh
25 December 2023, 5:39 pm

2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

Sneha-Prasanna updatenews360

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

sneha prasanna - updatenews360.jpg e

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

sneha prasanna - updatenews360.jpg e

திருமணம், குழந்தை பிறப்பிற்கு பிறகு சில ஆண்டுகள் பிரேக் விட்டிருந்த சினேகா பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். கிடைக்கும் ரோல்களில் நடித்து ஸ்கோர் செய்து வருகிறார். தற்போது தளபதி 68 படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து வருகிறார்.

sneha - updatenews360

இந்நிலையில், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கிய சினேகா திருமணத்திற்கு பிறகும் படங்கள் நடித்து வருகிறார். இப்படி நடிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி, விளம்பரங்கள் என கலக்கிவரும் நடிகை சினேகாவின் அக்கா ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசி உள்ளார்.

sneha-sister

அதாவது, அஜித்தை தான் ஜனா படத்தில் சந்தித்ததாகவும், அப்போது தன்னுடைய மகன் குழந்தை அவ்வளவு நன்றாக அந்த சமயத்தில் எங்களை பார்த்துக்கொண்டார். அதை தொடர்ந்து, பத்து வருடங்கள் கழித்து அவரை மால் ஒன்றில் பார்த்தேன். நான் பெரிய நடிகர் எதற்கு தொந்தரவு செய்ய வேண்டும் என்று ஒதுங்கினேன். ஆனால், அவர் என்னிடம் வந்து என் குடும்பத்தை விசாரிக்க எனக்கு பெரும் தர்ம சங்கடமானது. அஜித் எதையும் மறக்கவில்லை அவர் ஒரு ஜென்டில்மேன் என்று தெரிவித்துள்ளார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!