புதுப்பேட்டை திரைப்படம் :
நடிகர் தனுஷின் திரைப்பட கெரியரில் மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்பட்ட படம் தான் புதுப்பேட்டை. இந்த திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவையே ஒரு உலுக்கு உலுக்கியது என்று சொல்லலாம் .
இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சோனியா அகர்வால் மற்றும் சினேகா இருவரும் நடித்திருப்பார்கள். இந்த கதாபாத்திரங்கள் இரண்டுமே மிகவும் முக்கியமானதாக படத்திற்கு பார்க்கப்பட்டது .
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். யுவனின் இசை மிகப்பெரிய பலமாக படத்திற்கு அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படம் வெளியானபோது தமிழ்நாட்டின் 162 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
விலைமாதுவாக சினேகா:
சென்னையில் வசூலில் முதலிடத்தை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் திரையரங்களில் வெளிவந்த இந்த திரைப்படம் ரூ. 3 கோடி ரூபாய் வரை அப்போதே வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்தது. இதுநாள் வரை இந்த திரைப்படத்திற்காக ரசிகர்களின் எதிர்பார்ப்பே தனி தான் .
இந்த திரைப்படத்தில் நடிகை சினேகா விலைமாதுவாக நடித்திருப்பார். அந்த சமயத்தில் சினேகா அப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நொடித்தது மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது. காரணம் அந்த சமயங்களில் சினேகா மிகவும் ஹோமிலியான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர்.
இந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்த அனுபவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சினேகாபுதுப்பேட்டை படத்தில் ஒரு காட்சியில் வில்லன் என்னை வயிற்றில் எட்டி உதைக்கும் காட்சி அமைந்திருந்தது .
வயிற்றில் உதை:
இயக்குனர் செல்வராகவனுக்கு இன்னும் பெட்டராக வேண்டும் பெட்டராக வேண்டும் எனக் கூற வில்லன் நிஜமாகவே என்னுடைய வயிற்றில் வேகமாக எட்டி உதைத்து விட்டார். அப்படி உதைத்ததால் காட்சி முடிந்ததும் நான் கேரவனுக்கு சென்று வலியால் துடித்து அழுது கொண்டு இருந்தேன்.
இதை யாரோ பார்த்துவிட்டு செல்வராகவன் சாரிடம் கூற உடனே செல்வா சார் கேரவனுக்கு வந்து நிஜமாவே உதைத்து விட்டாரா? வலிக்கிறதா என்று கேட்டார்.அதன் பிறகு எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தார்கள் என கூறினார். அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தில் ரியலாக எடுக்க காட்சிகள் நிஜமாகவே படமாக்கப்பட்டது என சினேகா கூறியிருக்கிறார். இதை பார்த்து நெட்டிசன்ஸ் பலரும் அந்த திரைப்படத்திற்காக இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாரா சினேகா என பரிதாபப்பட்டுள்ளனர்.