வெள்ளை முடியோடு யாராச்சும் நடிப்பாங்களா? அஜித்தை சீண்டிய சினேகா!

Author: Shree
5 July 2023, 1:10 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மாஸ் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். குறிப்பாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அஜித் பல வருடங்களுக்கு முன்னரே எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வதை அறவே நிறுத்திக்கொண்டார். அஜித் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டால் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், சுற்றுலா செல்லுவது என தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவார்.

தற்ப்போது கூட பைக்கிலே வேர்ல்டு டூர் சென்றுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. மிகவும் போல்டான நடிகரான அஜித் ஒவ்வொரு படத்திற்கும் அவரது கெட்டப் தான் பெரிதாக பேசப்படும். அப்படித்தான் அவரது லுக் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது மங்காத்தா படத்தில் தான்.

அதுவரை யங் லுக்கில் மாஸாக நடித்து வந்த அஜித் மங்காத்தா படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தான் தான் அரைவயது ஆன நடிகர் தான் நான் என்பதை கொஞ்சம் வித்யாசமான முறையில் செம மாஸாக காட்டி நடித்திருந்தார். இந்நிலையில் அஜித்தின் மங்காத்தா லுக் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகை சினேகா, ஒரு பெரிய விஷயம் தான்.

எந்த ஒரு நடிகரும் இப்படியெல்லாம் வெள்ளை முடியோடு வயதான தோற்றத்தில் நடிக்க யோசிப்பார்கள். ஆனால், அஜித் மிகவும் போல்டாக அந்த படத்தில் நடித்திருப்பார். அஜித் வேற எந்த ஒரு நடிகர் மாதிரியும் நடிக்க மாட்டார். அவர் அவராகவே இருப்பதால் தான் இன்று இந்த அளவுக்கு மாஸ் ஹீரோவாக வளர்ந்திருக்கிறார் என சினேகா பெருமையோடு பேசியுள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…