அந்த மாதிரி சமயத்துல, சினேகா பண்ண வேண்டாம்னு சொல்லுவாங்க.. பிரசன்னா ஓபன் டாக்..!

Author: Vignesh
26 September 2023, 12:15 pm

2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

sneha prasanna - updatenews360.jpg e

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

sneha prasanna - updatenews360

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

sneha prasanna - updatenews360.jpg e

இந்நிலையில், சினேகாவின் சினிமா பயணம் குறித்த சில தகவல்களை செய்யாறு பாலு பகிர்ந்து உள்ளார். மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக இருந்த சுசிகணேஷன் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் பிரசாந்த் ஹீரோவாக ஒப்பந்தமாகி புதுமுக ஹீரோயினாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று, வார பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கப்பட்ட நிலையில், சினேகா அந்த பத்திரிக்கைக்கு புகைப்படத்தை அனுப்பியதை அடுத்து, சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

sneha prasanna - updatenews360

பின்னர், படம் வெளியான பின் அவருக்கு நல்ல பெயர் கிடைத்து குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். சினேகா எந்த அளவிற்கு பிரபலமானாரோ அந்த அளவிற்கு கிசுகிசு, சர்ச்சையில் சிக்கியது அனைவரும் அறிந்த ஒன்று.

sneha prasanna - updatenews360.jpg e

இந்தநிலையில், நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது, தனது மனைவி சினேகா படத்தில் நடிக்காததுக்கு காரணம் தங்கள் குழந்தைகள் தான் என்றும், தங்கள் இரண்டு பேரில் யாருக்கு படபிடிப்பு இல்லையோ அவர்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்வதாகவும், சினிமாவில் சில நேரங்களில் தொடர்ந்து 30 நாட்களுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவ்வாறான சூழ்நிலை ஏற்படும் பொழுது சினேகா வேண்டாம் என்று கூறி விடுவார் என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 9554

    4

    1