கவிதை மீதுள்ள ஆர்வத்தினால் பாடலாசிரியர் ஆகவேண்டும் என்ற முயற்சியோடு கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்து வருடம் பணியாற்றி எழுத்தின் நுணுக்கங்களையும் கவிதை எழுதும் திறன்களை நன்கு கற்றுத்தெறிந்து தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் ஆனார் சினேகன். இவர் பாடலாசிரியர் மட்டும் அல்லாது நடிகர், கவிதை எழுத்தாளர் ஆக இருந்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கரியாப்பட்டி என்ற ஒரு சிறு கிராமத்தில் தந்தையின் எட்டாவது மகனாக பிறந்து குடும்பத்தின் வறுமையை நன்கு அறிந்து உழைத்து முன்னேறினார். இவர் எத்தனையே பாடல்கள் தமிழ் படங்களுக்கு எழுதியுள்ளார். பல ஹிட் பாடல்களை கேட்டால் இது சினேகன் எழுதியதா? என நம்மில் பலரும் நிச்சயம் ஆச்சர்யப்படுவார்கள். அந்த அளவிற்கு திறமை இருந்தும் அடையாளம் இல்லாமல் இருந்துள்ளார். இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
பிக்பாஸுக்கு பிறகு சினேகன் அரசியலில் ஈடுபட்டு பிஸியாக இருந்தார். அதன்பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் இடையிலேயே வெளியேறினார். இடையில் இவருக்கும் நடிகை கன்னிகாவிற்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் எல்லா பொது நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தன் மனைவி கன்னிகாவின் பிறந்தநாளை பீச்சில் மிகவும் சிம்பிளாக கேக் வெட்டி அங்குள்ள மக்களுக்கு அதை கொடுத்து மகிழ்ந்துள்ளனர். மேலும் சினேகன்… கன்னிகாவிற்கு ஒரு தங்க நெக்லஸ் சர்ப்ரைஸ் பரிசாக கொடுத்து நெகிழவைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியிட இந்த அழகான தம்பதிக்கு அனைவரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ லிங்க்;
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு…
கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை…
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
This website uses cookies.