சினேகன்-கன்னிகா ஜோடி இரட்டை குழந்தைகளின் பெயரை கவனித்தீர்களா..அட செம கியூட்.!

Author: Selvan
14 February 2025, 9:04 pm

தூய தமிழ் பெயரை சூட்டிய சினேகன்

திரைப்பட பாடல் ஆசியரான சினேகன் 2021 ஆம் ஆண்டு நடிகை கன்னிகாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுடைய திருணம் குறித்து பலரும் பல விவாதங்களை முன் வைத்தனர்.

இதையும் படியுங்க: VJ மணிமேகலையை கொத்தா தூக்கிய பிரபல சேனல்..விஜய் டிவி-க்கு ஆப்பு ரெடி.!

ஸ்நேகனுக்கும் அவரது மனைவிக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால்,ரசிகர்கள் பலரும் இவர்கள் சீக்கிரம் பிரிந்துவார்கள் என கமெண்ட் செய்து வந்தனர்,ஆனால் இருவரும் திருமண உறவில் மகிழ்ச்சியாக இருப்பதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கன்னிகா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்,மேலும் மனைவியின் வளைகாப்பு போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்,ரசிகர்கள் பலர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி தங்களுக்கு இரண்டு பெண் தங்கங்கள் பிறந்துள்ளதாக அறிவித்தார்கள்.

இந்த நிலையில் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் முன்னனிலையில்,தங்களுடைய இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளார்கள்.கமல்ஹாசன் அவர்களுடைய குழந்தைகளை கையில் வாங்கி ஆசீர்வாதம் செய்து,தங்க வளையல்களை அணிவித்தார்.

பின்பு சினேகன் மற்றும் கன்னிகா சொன்ன பெயரை குழந்தைகளின் காதில் சொன்னார்,தங்களுடைய இரட்டை பெண் குழந்தைகளுக்கு காதல் என்று ஒரு குழந்தைக்கும்,கவிதை என்று இன்னொரு குழந்தைகக்கும் பெயர் வைத்துள்ளார்கள்.

சினேகன் தமிழ் மீது அதீக காதல் கொண்டுள்ளதால்,தங்களுடைய குழந்தைகளுக்கு தூய தமிழ் பெயரை வைத்து மகிழ்ந்துள்ளார்.

  • Sardar 2 Music Director Change திடீரென விலகிய யுவன்…சர்தார் 2 படக்குழுவில் குழப்பம்.!