பாட்டு உங்களால் அழகா தெரியுதா? இல்ல பாடல் வரிகளால் நீங்க அழகா தெரியுறீங்களா? – சினேகன்-கன்னிகா ஜோடிக்கு குவியும் லைக்ஸ்!

Author: Shree
21 July 2023, 3:42 pm

கவிதை மீதுள்ள ஆர்வத்தினால் பாடலாசிரியர் ஆகவேண்டும் என்ற முயற்சியோடு கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்து வருடம் பணியாற்றி எழுத்தின் நுணுக்கங்களையும் கவிதை எழுதும் திறன்களை நன்கு கற்றுத்தெறிந்து தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் ஆனார் சினேகன். இவர் பாடலாசிரியர் மட்டும் அல்லாது நடிகர், கவிதை எழுத்தாளர் ஆக இருந்து வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கரியாப்பட்டி என்ற ஒரு சிறு கிராமத்தில் தந்தையின் எட்டாவது மகனாக பிறந்து குடும்பத்தின் வறுமையை நன்கு அறிந்து உழைத்து முன்னேறினார். இவர் எத்தனையே பாடல்கள் தமிழ் படங்களுக்கு எழுதியுள்ளார். பல ஹிட் பாடல்களை கேட்டால் இது சினேகன் எழுதியதா? என நம்மில் பலரும் நிச்சயம் ஆச்சர்யப்படுவார்கள். அந்த அளவிற்கு திறமை இருந்தும் அடையாளம் இல்லாமல் இருந்துள்ளார். இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக்பாஸுக்கு பிறகு சினேகன் அரசியலில் ஈடுபட்டு பிஸியாக இருந்தார். அதன்பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் இடையிலேயே வெளியேறினார். இடையில் இவருக்கும் நடிகை கன்னிகாவிற்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் எல்லா பொது நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

snehan kannika

இந்நிலையில் தற்போது சைக்கிளில் ஜாலியாக ரைடு சென்ற வீடியோவை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் கவர்ந்திழுத்துள்ளார். இந்த வீடியோ அவ்வளவு அழகாகவும், நேச்சுரலாகவும் இருப்பதாய் பார்த்து நெட்டிசன்ஸ், “பாட்டு உங்களால் அழகா தெரியுதா இல்ல பாடல் வரிகளால் நீங்க அழகா தெரியுறீங்களா? உங்கள பார்க்கும்போது திரும்ப ஒருமுறை முதலில் இருந்து எங்கள் காதலை தொடங்க வேண்டும் என்று தோன்றுகிறது கமண்ட்ஸ் செய்து ரசித்துள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்:

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்