பிரபல நடிகரால் சீரழிந்த சினேகாவின் வாழ்க்கை… இன்னும் எழுந்திருக்க முடியல!

Author: Shree
13 May 2023, 1:02 pm

2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

இந்நிலையில் சினேகா திருமணத்திற்கு முன்னர் ராகவா லாரன்ஸ் , பிரசாந்த், அப்பாஸ், மாதவன், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நெருக்கமாக நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார். அந்த சமயத்தில் பீக்கில் இருந்த சினேகா தனுஷுடன் புதுப்பேட்டை படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனால் சினேகா மோசமாக விமர்சிக்கப்பட்டதோடு படவாய்ப்புகளையும் இழந்தார்.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 2350

    96

    78