ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ள சோபிதா துலிபாலா… காட்டுத்தீயாய் பரவும் வீடியோ!

Author:
9 August 2024, 7:25 pm

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகையான சோபிதா துலிபாலா திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் வடிவழகியாக தனது கெரியரை தொடங்கினார். மாடல் அழகியாக இருக்கும்போது பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவருக்கு மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. முன்னதாக இவர் 2013 “ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2013” பட்டத்தை பெற்று கௌரவிக்கப்பட்டார். அதன் பிறகு அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் வெளிவந்த இராமன் ராகவ் 2.0 என்ற திரைப்படத்தில் நடித்த துலிபாலா திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார் .

sobhita dhulipala - updatenews360

அதை தொடர்ந்து அமேசான் வீடியோவில் நாடகத்தொடராக வெளிவந்த “மேட் இன் ஹெவன்” என்ற சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார். இந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதனிடையே துலிபாலா பிரபல தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரானாக நாக சைதன்யாவை ரகசியமாக காதலித்து நேற்று மிகவும் எளிமையான முறையில் நாகார்ஜுனாவின் வீட்டிலேயே நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

sobhita dhulipala - updatenews360

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நாகார்ஜினாவின் வருங்கால மனைவியான சோபிதா துலிபாலா ஆணுறை விளம்பரத்தில் நடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சமந்தா கிளாமரா நடிச்சதுக்கு மட்டும் வீட்டை விட்டு துரத்தி விவாகரத்து பண்ணீங்களே இந்த அம்மா அதைவிட எல்லை மீறி நடிச்சிருக்காங்களே இப்போ என்ன சொல்லவரீங்க? என கேள்வி எழுப்பி விளாசித்தள்ளியுள்ளனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 305

    0

    0