ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகையான சோபிதா துலிபாலா திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் வடிவழகியாக தனது கெரியரை தொடங்கினார். மாடல் அழகியாக இருக்கும்போது பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவருக்கு மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. முன்னதாக இவர் 2013 “ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2013” பட்டத்தை பெற்று கௌரவிக்கப்பட்டார். அதன் பிறகு அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் வெளிவந்த இராமன் ராகவ் 2.0 என்ற திரைப்படத்தில் நடித்த துலிபாலா திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார் .
அதை தொடர்ந்து அமேசான் வீடியோவில் நாடகத்தொடராக வெளிவந்த “மேட் இன் ஹெவன்” என்ற சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார். இந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனிடையே நாக சைத்தன்யாவை ரகசியமாக காதலித்து வந்த சோபித துலிபாலா அவரை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது நடிகை சோபிதா நாக சைதன்யாவை காதலிப்பதற்கு முன்னதாக பிரணவ் மிஸ்ரா என்ற நபரை காதலித்து டேட்டிங் செய்து வந்துள்ளார். பிரணவ் மிஸ்ரா பேஷன் டிசைனர். இவர்கள் இருவரும் பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது பின்னர் அது காதலாக மாறியிருக்கிறது.
2019 ஆம் ஆண்டில் இருந்து இருவரும் நெருக்கமாக பழகி டேட்டிங் செய்து வந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு தான் 2022 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவுடன் நடிகை சோபிதாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாக பிரணவ் மிஸ்ராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அவர் பார்ப்பதற்கு தாடி மீசையுடன் கிட்டத்தட்ட நாக சைத்தன்யா போன்று இருக்கிறாரே அதனால் தான் நாகசைதன்யாவை பார்த்ததும் காதல் வலையில் விழுந்தாரா? என சோபிதாவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.