ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகையான சோபிதா துலிபாலா திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் வடிவழகியாக தனது கெரியரை தொடங்கினார். மாடல் அழகியாக இருக்கும்போது பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவருக்கு மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. முன்னதாக இவர் 2013 “ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2013” பட்டத்தை பெற்று கௌரவிக்கப்பட்டார். அதன் பிறகு அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் வெளிவந்த இராமன் ராகவ் 2.0 என்ற திரைப்படத்தில் நடித்த துலிபாலா திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார் .
அதை தொடர்ந்து அமேசான் வீடியோவில் நாடகத்தொடராக வெளிவந்த “மேட் இன் ஹெவன்” என்ற சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார். இந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இதனிடையே துலிபாலா பிரபல தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரானாக நாக சைதன்யாவை ரகசியமாக காதலித்து நேற்று மிகவும் எளிமையான முறையில் நாகார்ஜுனாவின் வீட்டிலேயே நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.
இந்த நிலையில் சோபிதா துலிபாலாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. அவரின் மொத்த சொத்து மதிப்பே வெறும் 7 முதல் 10 கோடி தான் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ. 80 கோடிக்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடதக்கது. இது சமந்தாவை காட்டிலும் மிகவும் கம்மி. வளர்ந்து வரும் நடிகையான துலிபாலா இன்னும் பெரிதாக ஒன்றும் சம்பாதிக்கவில்லை என அவரை சமந்தாவுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.