சினிமா பிரபலங்களுக்கு என்ன ஆச்சு…விவாகரத்து வாங்கிய பிரபல நடிகை…!

Author: Selvan
13 December 2024, 7:49 pm

மணிகண்டன் ராஜேஷ்-சோபிதா விவாகரத்து விவகாரம்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் ராஜேஷ்.இவர் தன்னுடைய மனைவி சோபியாவை விவாகரத்து பெற்று பிரிவதாக வெளியான தகவல் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

aishwarya rajesh brother divorce

மணிகண்டன் ராஜேஷ் தன்னுடைய கடின உழைப்பால் சின்னத்திரையில் அடியெடுத்துவைத்தார்.இவருக்கு முதன்முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான அவள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து அழகு சிவா மனசுல சக்தி தாய்வீடு நாச்சியார் போன்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இவர் தன்னுடன் நடித்த நடிகையான சோபிதாவை காதலித்து கரம் பிடித்தார்.

இதையும் படியுங்க: மீனாவை சீண்டும் முத்து…ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்..விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை தொடர்…

இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார்.இவர்கள் இருவரும் இணைந்து பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.

tv actor manikandan divorce news

நடிகை சோபிதா சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்பாட் திரைப்படத்தில் நடித்தார்.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மணிகண்டன் சோபிதா தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானாலும்,அவர்களிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!