கருத்து சொல்றீங்க; அதுவும் ஸ்டோரில; இந்தியன் 2 க்கு சப்போர்ட்; அஷ்வினை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
Author: Sudha17 July 2024, 4:51 pm
இந்தியன் 2 குறித்து பலரும் எதிர்மறையாக விமர்சித்து வரும் நேரத்தில் ஷங்கருக்கு ஆதரவாக நடிகர் அஷ்வின் குமார் பதிவிட்டுள்ளார். அவர் கதாநாயகனாக அறிமுகமான ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தின் இசை வெளியீட்டின் போது, “40 கதைகளைக் கேட்டு தூங்கிவிட்டேன்,” என அவர் பேசினார். அப்போது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் அஷ்வின் குமார். இப்போது ‘நொடிக்கு நொடி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

தனது இன்ஸ்டாவில் ஷங்கருக்கு ஆதரவு தெரிவித்து, “இந்திய சினிமாவிற்கு ஷங்கர் சார் கிப்ட், எப்போதுமே பெருமையுடன் இருப்பவர். இந்திய சினிமாவிற்கு பிரம்மாண்டத்தை அறிமுகப்படுத்திய அவர் மீது மரியாதையுடனும், அன்புடனும் இருங்கள். குறிப்பு : கீ போர்டு வாரியர்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவை அவர் ஸ்டோரியாக மட்டுமே போட்டிருப்பதால் அதில் யாராலும் கமெண்ட் செய்ய முடியாது. இருந்தாலும், அந்தப் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் அஷ்வினை விமர்சித்து வருகிறார்கள்.நெட்டிசன்கள் பலர் இவர் பிரம்மாண்ட படங்கள் பார்த்ததே இல்லை போல என கலாய்த்து வருகிறார்கள்.