ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.. சோனியா அகர்வாலின் Before & After டிரான்ஸ்பர்மேஷன் போட்டோ..!
Author: Vignesh21 December 2023, 12:00 pm
தமிழில் பல வருடங்களுக்கு முன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் , தொடர்ந்து செல்வராகவனின் படத்தில் மட்டுமே சோனியா நடித்து வந்தார். செல்வா எடுத்த 7G ரெயின்போ காலனி படமும் பெரிய ஹிட் அடித்தது.
அந்த படத்தின் மூலம் தமிழில் பலருக்கு பேவரைட் நடிகையாக சோனியா அகர்வால் ஆனார். ஆனால் போக போக அந்த சோனியாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பின், சோனியா செல்வராகவனை கடைசியில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டு, சோனியா தனியாள் ஆனார்.
தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். தற்போது, சீரியல்களிலும் நடித்து வருகிறார் அம்மணி. இந்நிலையில், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
முன்னதாக, பீக்கில் இருந்த போதே இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்த இவர். ஆனால், சில காரணங்களால் மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் சிறிது இடையில் சினிமா பக்கம் வராமல் இருந்த சோனியா அகர்வால் தற்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கொஞ்சம் குண்டாக காணப்பட்டவர் சுத்தமாக உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டார்.