புஷ்பா 2 – வை தூக்கி வீசுமா..! சூதுகவ்வும்-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Author: Selvan
20 November 2024, 8:29 pm

சூதுகவ்வும் படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.படம் முழுவதும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் அமைந்திருக்கும்.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில்,இரண்டாம் பாகத்திற்கான லீட் காட்சியைப் போல் அமைக்கப்பட்டிருந்ததால்,படத்தின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

Vijay Sethupathi cameo in Soodhu Kavvum 2

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு சூது கவ்வும் 2 பாகம் வெளியாகவுள்ளது.
சூது கவ்வும் ஒன்றில் நடித்த நடிகர்,நடிகைகள் நிறைய பேர் சூது கவ்வும்
2 படத்தில் நடிக்கவில்லை சூது கவ்வும் என்றாலே அனைவருக்கும் விஜய் சேதுபதி நடிப்பு தான் நியாபகத்துக்கு வரும் .அதனால் படத்தின் இயக்குனர் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைத்துள்ளார். படத்தின் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார்.

இதையும் படியுங்க: உருகி உருகி காதலித்த ரசிகை… ரகுமானும் காதலித்தாரா ?..வெளிவராத ரகசியம் ..!

தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் 13ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது . புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆகி அடுத்த வாரத்தில் சூது கவ்வும் 2 படம் ரிலீஸ் ஆகிறது .

புஷ்பா 2 படத்தை தூக்கி சாப்பிட்டு,சூது கவ்வும் 2 படம் பெரும்பாலான தியேட்டரை ஆக்கிரமிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 96

    0

    0