தமிழ் சினிமாவில் 90களில் ஆரம்பித்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் காமெடி நடிகர் போண்டாமணி. ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் இவரது காமெடி பிரபலம்.
இந்நிலையில் சமீபத்தில் இரண்டு கிட்னிகளும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துவந்தார். இவர் சிகிச்சைக்காக பணமின்றி மிகவும் கஷ்டப்படுவதாக வீடியோ ஒன்று வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதனையடுத்து தமிழக முதல்வர் உட்பட திரைப்பிரபலங்கள் வரை அவரவர் தங்களால் முடிந்த பண உதவி செய்து அவரை காப்பற்றினர். இது குறித்து பிரபல யூடுப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த போண்டாமணி தனக்கு உதவி செய்தவர்களின் லிஸ்ட்டை கூறி நன்றி தெரிவித்தார்.
அப்போது நடிகர் சூரி குறித்து பேசிய அவர் “அவன் நன்றி கெட்டவன்” என மிகவும் ஆதங்கப்பட்டு கடுமையாக சாடியுள்ளார். அதாவது, மேலும் பேசிய அவர்,நடிகர் சூரி சென்னைக்கு வந்த சமயத்தில் போண்டாமணி தான் அவரது வீட்டில் தங்க வைத்து சூரிக்கு சாப்பாடு எல்லாம் கொடுத்து பார்த்துக்கொண்டாராம்.
மேலும் நகைச்சுவை தொடர் இன்றில் நடிக்க வாய்ப்பு கொடுத்து தினக்கூலியாக போண்டாமணி சூரிக்கு 200 ரூபாய் வரை சம்பளமாக கொடுப்பாராம்.அப்படி சூரியின் ஆரம்பகாலத்தில் உறுதுணையுமாக இருந்த தன்னை மறந்து, தான் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது கூட தன்னை நேரில் வந்து பார்க்கவில்லை.
இதுவரை எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. தான் வளர்த்துவிட்டவன் இன்று பிரபலமாக இருந்தும் ஒரு போன் பண்ணிக்கூட பேசாமல் இப்படி நன்றி கெட்டவனாக இருப்பது தனக்கு மிகுந்த வேதனையளிப்பதாக போண்டாமணி உருக்கமாக கூறியுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.