ஜல்லிக்கட்டு ரேஸில் சீற போகும் சூரியின் கம்பீர காளை…பார்த்தாலே கதி கலங்குதே..!
Author: Selvan12 January 2025, 11:25 am
பொங்கல் பண்டிகை என்றாலே மக்கள் அனைவருக்கும் நியாபகம் வருவது ஜல்லிக்கட்டு தான்.அந்த வகையில் ஜல்லிக்கட்டு திருவிழா தமிழகம் முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது.
இதற்காக நடிகர் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் தன்னுடைய காளையான ராஜாக்கூர் கருப்பனை களமிறக்க உள்ளார்.இதற்காக தன்னுடைய காளையை கம்பிரமாக ரெடி பண்ணி அதற்கு அலங்காரம்,மாலை எல்லாம் போட்டு,ஆரத்தி எடுத்த வீடீயோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூரி மதுரையில் உள்ள ராஜாக்கூர் ஊரை சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய காளைக்கு ஊர் பெயரை சேர்த்து வைத்துள்ளார்.இவருடைய காளை எந்த போட்டியில் கலந்து கொள்ளும் என்பது விரைவில் தெரிய வரும்.
நடிகர் சூரி சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் எல்லாம் செய்து பின்பு காமெடியனாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்த நிலையில் சமீப காலமாக படங்களில் ஹீரோவாக கலக்கி வருகிறார்.
இதையும் படியுங்க: இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!
இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விடுதலை-2 படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .மேலும் நடிகர் சூரி தனக்கு சொந்தமாக பல ஹோட்டல்களை நடத்தி வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.