தமிழ் சினிமாவில் கூட்டத்தில் ஒருவராக காமெடி காட்சியில் தலைகாட்டியவர் நடிகர் சூரி. மதுரையை சொந்த ஊராக கொண்டு கிராமத்தானாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். 1997முதல் தற்போது வரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
காமெடி நடிகராக நடித்து இன்று ஹீரோவாக கோடிகளில் சம்பளம் வாங்குபவராக சூரி உயர்ந்திருக்கிறார். அதற்காக அவர் மிகவும் உழைத்து தான் இந்த இடத்தை பிடித்துள்ளார். ஆம், தனது உடலை கட்டுமஸ்தான தோற்றத்தில் வைக்க எப்போதும் உடற்பயிற்சி, ஒர்க் அவுட் என கடைபிடித்து ஹீரோவுக்கான தோற்றத்தையும், உடல் அமைப்பையும் வரவைத்துக்கொண்டார். அவரது transformation பல டாப் நடிகர்களையே பிரம்மிக்க செய்தது.
மேலும் படிக்க: அட ஆச்சரியமா இருக்கே.. காஞ்சனா 4-ல்இவங்கதான் ஹீரோயினா?.. வைரல் பதிவு..!
சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மற்ற எந்த காமெடி நடிகர்களும் இந்த அளவிற்கு உயர்ந்ததில்லை என கோலிவுட்டில் பேசப்படுகிறார். கருடன் படத்தில் நடிக்க சூரி ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். ஆரம்பத்தில் ரூ.5க்கும் ரூ.10க்கும் கஷ்டப்பட்டு கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த சூரி இன்று இந்த அளவிற்கு தன் சொந்த முயற்சியால் வளர்ந்திருப்பதை கோலிவுட் திரையுலகம் பிரம்மித்து பேசுகிறது.
மேலும் படிக்க: அவரு தான் வேணும்.. அடம் பிடித்த பிரேம்ஜியின் வருங்கால மனைவி; லீக்கான ரகசியம்..!
தற்போது, கருடன் படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்தில் நடிக்கவும் இருக்கிறார். கருடன் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி அளித்து வரும் சூரி ரஜினி முருகன் படத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து உள்ளார்.
அதில், படத்தில் நானும் சிவகார்த்திகேயனும் இயக்குனர் சார் எழுதி கொடுத்ததை பேசவே மாட்டோம். அதனால், இயக்குனர் சார் விளக்கமாக விஷயத்தை கூறிவிடுவார். அப்படி கார் வாங்கும் காட்சியில் மனோபாலா சாரும் கீர்த்தி சுரேஷ் இயக்குனருடன் சென்று டயலாக் என்ன என்று கேட்பார்கள். அதற்கு இயக்குனர் கீர்த்தி அவங்க நான் சொல்லுறதை பேசவே மாட்டாங்க, நீ இதை மனப்பாடம் பண்ணாத கண்டிப்பா அவனுங்க ஆக்ஷன் சொன்னதும் வேற வேற மாதிரி பேசுவாங்க என்று சொல்வார். அப்போ நான் எப்படி சார் டைமுக்கு எடுக்கணும்னு கீர்த்தி சுரேஷ் புலம்பும். அப்படித்தான் அந்த காட்சியில் இவ்வளவு இங்கிலீஷ் பேச தெரிஞ்ச உனக்கு யாரு கிட்ட பேசணும்னு தெரியல பார்த்தியா என்று ஸ்பாட்டில் பேசி விட்டேன் என்று சூரி தெரிவித்திருக்கிறார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.