அய்யய்யோ.. சூரிக்கு இப்படி நடந்துடுச்சே: கவலையில் ரசிகர்கள்..!

Author: Vignesh
3 October 2022, 6:00 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் ‘விடுதலை’ படத்தின் ஷூட்டிங், நிறைவடையும் நிலையில் போய்க்கொண்டிருக்கிறது. டிசம்பருக்குள் ‘விடுதலை’ படப்பிடிப்பு சொன்னது சொன்னபடியே முடியுமாம் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சூரி மற்றும், ‘மதயானைக்கூட்டம்’ விக்ரம் சுகுமாரன் இயக்கத்திலும் நடிக்கிறார்.

அவர் சொன்ன கதை சூரிக்கு மிகவும் பிடித்துப் போய், டிசம்பரில் இருந்து கால்ஷீட் தருகிறேன் என சொல்லியிருக்கிறார் சூரி. அதைப் போல அமீர் இயக்கத்தில் சூரி நடிப்பதாக சொல்லப்பட்ட ‘இறைவன் மிகப்பெரிவன்’ படத்தில் சூரி இல்லையாம். இதற்கு அடுத்த படத்தில் தான் அமீர் – சூரி கூட்டணி இணைகிறது என பல தரப்பில் சொல்கின்றனர்.

அந்த திரைப்படம் இணைய தொடர் வகையில் ஓ.டி.டியில் வெளியாக வாய்ப்புள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பதால், தன்னுடைய அடுத்தடுத்தப் படங்களை மிக கவனத்துடன் தேர்வு செய்ய சூரி திட்டமிட்டு இருக்கிறார். அந்த வகையில்தான் தற்போது விக்ரம் சுகுமாரன் கதையையும் தேர்வு செய்துள்ளார் என கூறப்படுகிறது

மற்றும் சூரி நடத்தி வரும் ஓட்டல் தனது வாடிக்கையாளர்களிடம் ஜி.எஸ்.டியை வசூலிக்காமல் உணவை விற்றதாக வணிகவரித்துறை நடத்திய அதிரடி ரெய்டால் சூரி தரப்பு அதிர்ச்சியடைந்திருக்கிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!