அலங்காநல்லூரில் கெத்து காட்டிய சூரியின் காளை…உதயநிதி கொடுத்த ரியாக்ஷனை பாருங்க..!

Author: Selvan
16 January 2025, 3:56 pm

களைகட்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா

பொங்கல் திருவிழாக்களில் காலம்காலமாக முக்கிய பங்காக இருப்பது தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தான்,அதிலும் குறிப்பாக மதுரையில் நடைபெறும் அவனியாபுரம்,பாலமேடு,அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகளவில் சிறப்பு வாய்ந்தது.

Soori's bull Jallikattu

அந்த வகையில் பொங்கல் திருவிழாவின் கடைசி நாளான காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரில் நடைபெற்று கொண்டிருக்கும் போட்டியில் பிரபல நடிகரான சூரியின் ராஜ்கூர் கருப்பன் காளை களமிறங்கியது.

இதையும் படியுங்க: விஜய் சேதுபதியை அழ வைத்த படக்குழு…பிறந்த நாள் அதுவுமா இப்படியா..வைரலாகும் வீடியோ..!

முன்னதாக இந்த போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அவர் கூட அவரது மகன் இன்பநிதியும் வருகை தந்து போட்டியை கண்டு கண்டுகளித்தனர்.

அப்போது சூரியின் காளை வரும் போது நிகழ்ச்சி தொகுப்பாளர்,இது நடிகர் சூரியின் காளை என அறிவித்தார்,உடனே அங்கிருந்த உதயநிதி,சூரி இங்க வரவில்லையா என கேட்பார்.அப்போது ராஜ்கூர் கருப்பன் காளை வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து பரிசை தட்டிச்சென்றது.

ஒவ்வொரு வருடமும் அலங்காநல்லூர் வாடிவாசலில் சூரியின் காளை பங்கேற்று,இதுவரை 50 முறைக்கு மேல் பிடிபடாமல் வெற்றி பெற்றுள்ளது என மாட்டின் பராமரிப்பாளர் தெரிவித்தார்.மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காளையும் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் காளைகளும் பங்கு பெற்று பரிசுகளை வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?