அவன கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கடா…ரசிகர்கள் கோஷத்தால் கதி கலங்கிய சூரி..!
Author: Selvan20 December 2024, 8:56 pm
ரசிகர்களின் கோஷம் -சூரியின் பதில்
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் விடுதலை 2 இன்று திரையரங்குகளில் வெளியாகி,ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதல் பாகத்தை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் ரசிகர்களுக்கு ஒரு வலிமிகுந்த அரசியல் அனுபவத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் திருச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் படத்தை பார்த்து விட்டு பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்தார் நடிகர் சூரி.படம் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்த அவர்,விடுதலை 2 படம் பார்த்து வெளியே வரும் ஒவ்வொருவருக்கும்,அவர்கள் மனதில் ஒரு வலிமிகுந்த உணர்வை ஏற்படுத்தும்.
படம் கமர்ஷியலை தாண்டி, மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அரசியல் விவாதங்களை கொண்டுள்ளது,இப்படத்தில் வாத்தியார் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் விரிவாக இடம்பெற்றிருப்பதாக கூறினார்.
இதையும் படியுங்க: விடாமுயற்சி படத்தில் ட்விஸ்ட்…அஜித்துடன் இணைந்த பிரபல நடிகை..படக்குழு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!
அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவரை ‘வருங்கால சூப்பர் ஸ்டார்’ மற்றும் ‘அடுத்த தளபதி’ என கோஷமிட்டனர்.உடனே சூரி அடேய் தம்பிகளா…அதுலாம் நமக்கு வேண்டாம்,உங்களில் ஒருவனாக இருந்தால் போதும் என கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து சென்றார்.இந்த நிகழ்வு தற்போது வைரல் ஆகி வருகிறது.