நடப்பவை எல்லாம் நன்மைக்கே.. சண்டைகளை மறந்து விஷ்ணு விஷாலுடன் கைகோர்த்த சூரி..!

Author: Vignesh
10 April 2024, 10:29 am

கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இடையே நில மோசடி தொடர்பான பிரச்சனை நீடித்து வந்த நிலையில், தற்போது இருவரும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கைகோர்த்துள்ளனர். அதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சிறுசேரியில் ஒரு நிலம் வாங்கிய விவகாரத்தில் தன்னுடைய 2.5 கோடி படத்தை மோசடி செய்து விட்டதாக ஓய்வு பெற்ற டிஜிபியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மீது நடிகர் சூரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!

vishnu vishal soori

இதனை தொடர்ந்து, இந்த புகாரின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ரமேஷ் குடவாலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

vishnu vishal soori

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

இது தொடர்பாக சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். அதன் பிறகு, இருவரும் சேர்ந்து படம் நடிப்பதை ஒரு சில ஆண்டுகளாக தவிர்த்து வந்தனர். இந்த நிலையில், நேற்று நடிகர் விஷ்ணு விஷால் தனது எத்தனை பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

vishnu vishal soori

அதில், நடிகர் சூரி தனது தந்தை ரமேஷ் குடவாலாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், எல்லாருக்கும் காலம்தான் பதில் நேர்மறை எண்ணங்களை பரப்புவோம் சூரியன்னா என்று பதிவிட்டு உள்ளார். இந்த பதிவிற்கு பதில் பதிவை சூரி போட்டிருந்தார். அதில், நடப்பவை எல்லாம் நன்மைக்கே நன்றிங்க என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடந்த ஒரு சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே நிலவி வந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ