ப்ளீஸ் ப்ளீஸ்… அந்த நடிகையை ஹீரோயினா போடுங்க – பாலாவிடம் கெஞ்சிய சூர்யா!
Author: Shree8 April 2023, 10:13 am
உலக தமிழர்களின் பேவரைட் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் அப்பா சிவகுமார் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தாலும் அவரது தனித்துவமான நடிப்பும் ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 1997ம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.
அதன் பின்னர் நந்தா, காக்க காக்க, பிதாமகன் , பேரழகன் , வேல் , வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, ஆறு, கஜினி , அயன் , சில்லுனு ஒரு காதல், ஆதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
சூர்யா காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகை ஜோதிகாவை காதலித்து பின்னர் 8 ஆண்டுகள் பெற்றோர்கள் சம்மதத்திற்காக காத்திருந்து திருமணம் செய்துக்கொண்டதாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சூர்யா காக்கா படத்திற்கு முன்னரே ஜோதிகாவை காதலித்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
ஆம், 2001ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் நந்தா. இப்படத்தில் லைலா ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் சூர்யா பலமுறை பாலாவிடம் இப்படத்தில் ஜோதிகாவை நடிக்க வையுங்கள் என கேட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து அகதியாக வரும் பெண் காதபத்திரம் என்பதால் அது ஜோதிகாவை விட லைலாவுக்கு தான் பொருத்தமாக இருக்கும் என கூறினார். அப்பவும் கேட்காமல் திரும்ப திரும்ப ஜோதிகாவை ஹீரோயினா போடலாமே என கேட்டாராம் சூர்யா.
என்னப்பா நீ புரிஞ்சிக்கவே மாட்ற அந்த நடிகையிடம் அப்படி என்ன இருக்கு? என்ன காதலிக்கிறியா? என பட்டுன்னுகேட்டுள்ளார் பாலா. அன்றிலிருந்து அந்த பேச்சை எடுக்கவில்லையாம் சூர்யா. ஆக காக்க காக்க படத்திற்கு முன்னரே சூர்யா ஜோதிகாவை ஒருதலையாக உருகி உருகி காதலித்து வந்த ரகசியம் இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.