பிரபல நடிகையுடன் சமந்தாவின் Ex கணவர் காதல்? டோலிவுட்டின் ஹாட் நியூஸ்!

Author: Rajesh
9 January 2024, 9:16 am

ஆந்திராவை சேர்ந்த நடிகையான சோபிதா துலிபாலா ஆரம்பதில் மாடல் அழகியாக தனது வாழ்க்கை பயணத்தை துவங்கி அதன் மூலம் கிடைத்த அறிமுகத்தை வைத்து சினிமாவில் நுழைந்தார். இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 2016ம் ஆண்டு இந்தியில் வெளியான அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 என்ற அதிரடித் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் குட்டாச்சாரி, மேட் இன் ஹெவன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

பின்னர் தமிழில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானிதி என்ற கேரக்டரில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இவர் சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவுடன் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள்அவ்வப்போது புகைப்படங்களுடன் வெளியாகியது. ஆனால், இதனை சோபிதா துலிபாலா திட்ட வட்டமாக மறுத்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சோபிதா துலிபாலாவிடம் நாக சைதன்யாவுடன் வெளியாகும் காதல் கிசு கிசு குறித்து கேட்டதற்கு, உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் எந்த தவறும் செய்யாதபோது, அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும். இதுபோன்ற பொய்யான செய்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் என் நேரம் தான் வீணாகும் என கோபமாக பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சோபிதா துலிபாலாவின் தங்கை சமந்தா துலிபாலாவுக்கும் அவரது காதலர் சாஹில் என்பவருக்கு சமீபத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண கொண்டாட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர், சவுத் மீட்ஸ் நார்த் என கேப்ஷன் கொடுத்து சாஹல் டெல்லியைச் சேர்ந்தவர், என் சகோதரி ஆந்திராவைச் சேர்ந்தவர். அதனால் இரட்டிப்பான கொண்டாட்டமாக இந்த திருமணம் உள்ளது என கூறியுள்ளார்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…