ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசலுக்கு அடித்த அதிர்ஷ்டம்…போட்டி போடும் ஓடிடி நிறுவனங்கள்…!
Author: Selvan30 November 2024, 7:56 pm
பல மொழிகளில் சொர்க்கவாசல் OTT ரிலீஸ்
சமீபகாலமாக நடிகர்,இயக்குனர் என பல்வேறு முகங்களில் கலக்கி வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி.இவருடைய அசுர வளர்ச்சியை பார்த்து சினிமாவில் பல பேர் வாயடைத்து நிற்கின்றனர்.

தற்போது இவருடைய நடிப்பில் வெளியான சொர்க்கவாசல் திரைப்படம் தியேட்டரில் சக்கை போடு போட்டு வருகிறது.சிறைச்சாலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி இதுவரை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்க: மோசடி புகாரில் சிக்கிய நடிகை..சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை..!
இது 1999 இல்நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.தற்போது இப்படத்தின் OTT அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சொர்க்கவாசல் திரைப்படம் வெற்றிப்படமாக மாறியுள்ளதால் “தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி” ஆகிய மொழிகளில் OTT-யில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த படத்தின் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வங்கியுள்ளதாக கூறப்படுகிறது.விரைவில் இப்படத்தி OTT ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.