தனித்தீவில் அந்த பிரபலத்துடன் ரஜினி மகள்.. ஓபன்னாக பேசிய சௌந்தர்யா..!

Author: Vignesh
11 August 2023, 3:00 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர்தான் ரஜினியின் இரண்டாம் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Soundarya-Rajinikanth -updatenews360

பின்னர் பெரும்பாலும் ரஜினியின் படங்களில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியதுடன் மஜா, சண்டக்கோழி, சிவகாசி, கத்தி என பல படங்களில் பணியாற்றி உள்ளார்.

Soundarya-Rajinikanth -updatenews360

2010ஆம் ஆண்டு கோவா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, கோச்சடையான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. பின்னர் 2017 ஆம் ஆண்டு தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கியிருந்தார். இதில், பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த போதிலும், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

Soundarya-Rajinikanth -updatenews360

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற சௌந்தர்யாவிடம் தனித்தீவில் யாருடன் இருக்க ஆசைப்படுகிறீர்கள் என்று தொகுப்பாளர் கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த அவர் ஷங்கர் மற்றும் ராஜமௌலி உடன் இருக்க ஆசைப்படுவேன். அவர்களுடன் நிறைய விஷயம் பேச இருக்கிறது என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Soundarya-Rajinikanth -updatenews360
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 2214

    7

    8