நீ மட்டும் தான் பண்ணுவியா?.. ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக களம் இறங்கிய சௌந்தர்யா..!

Author: Vignesh
8 September 2023, 1:26 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர்தான் ரஜினியின் இரண்டாம் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Soundarya-Rajinikanth -updatenews360

பின்னர் பெரும்பாலும் ரஜினியின் படங்களில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியதுடன் மஜா, சண்டக்கோழி, சிவகாசி, கத்தி என பல படங்களில் பணியாற்றி உள்ளார்.

Soundarya-Rajinikanth -updatenews360

2010ஆம் ஆண்டு கோவா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, கோச்சடையான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. பின்னர் 2017 ஆம் ஆண்டு தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கியிருந்தார். இதில், பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த போதிலும், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

Soundarya-Rajinikanth -updatenews360

இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பில் உருவான கோச்சடையான் படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை கொடுத்தது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன் சௌந்தர்யா ரஜினியிடம் நவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான படமான கோச்சடையானில் ரஜினியை நடிக்க வற்புறுத்தியதாகவும், இதற்கு ரஜினியும் ஓகே சொல்லிவிட்டார்.

kochadaiyaan-updatenews360

கோச்சடையான் படத்தின் பட்ஜெட் அதிகமாக சென்றதால், படத்தை எடுத்தவரை அப்படியே ரிலீஸ் பண்ணி விடுங்கள் என்று ரஜினி தெரிவித்துவிட்டார். இப்படத்திற்கு பின் மகள் பேச்சைக் கேட்கக் கூடாது என்று ரஜினி முடிவு எடுத்து விட்டதாகவும், இதுகுறித்து, அவரை காலா பட ஆடியோ விழாவில் பேசியிருப்பார் என பயில்வான் தெரிவித்து இருந்தார்.

Soundarya-Rajinikanth -updatenews360

விசாகன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து ஒரு சில படங்களை இயக்கியும் தயாரித்தும் பின் பிரேக் எடுத்துக்கொண்டார் சௌந்தர்யா. அந்த சந்தோஷத்தில் இருந்த ரஜினிக்கு கடந்த ஆண்டு ஐஸ்வர்யா தனுஷின் பிரிவு அடுத்த தலைவலி கொடுத்தது. அதிலிருந்து தான் மீண்டு வந்ததாக கூறி இயக்கத்தில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா படத்தில் ரஜினியை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்தார். நீ மட்டும் தான் அப்பா பிள்ளையா? என்று கூறி சௌந்தர்யா தனது கணவருடன் சேர்ந்து பக்கா பிளானை போட்டு இருக்கிறார். சௌந்தர்யா பல ஆண்டுகளுக்கு பின் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதாவது இயக்குனர் நோவா அபிரஹாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் ஒரு படத்தின் பூஜையை நடத்தி இருக்கிறார் சௌந்தர்யா.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 502

    0

    0