பிரபல நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்த சௌந்தர்யா? பல வருட ரகசியம் கசிந்தது!

Author:
2 August 2024, 12:44 pm

தமிழ் சினிமாவில் 2000 கால கட்டங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை சௌந்தர்யா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக விமான விபத்தில் இறந்து விட்டார். இன்று வரை அவரது மரணம் அவரது தீவிர ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Soundarya-updatenews360

இந்நிலையில் நடிகை சௌந்தர்யா குறித்த ஒரு ரகசிய விஷயம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபல பத்திரிக்கையாளர் தேவராஜ் நடிகை சௌந்தர்யாவை ஒரு முறை பேட்டி எடுக்கும்போது “நீங்கள் தெலுங்கு நடிகரை காதலிப்பதாகவும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது அது உண்மையா? என கேட்டதற்கு உடனே சவுந்தர்யா கண் கலங்கி அங்கேயே அழுதுவிட்டாராம்.

ஏன் இப்படி எல்லாம் கேட்கிறீர்கள்? என மனம் வருத்தத்துடன் கேட்டிருக்கிறார் சௌந்தர்யா. இந்த விவகாரம் உடனடியாக விஜயகாந்த் காதுக்கு செல்ல விஜயகாந்த் அந்த பத்திரிகையாளரை அழைத்து “அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு… அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் கேட்காதீர்கள். தயவு செய்து அவரிடம் சென்று மன்னிப்பு கேளுங்கள் என கூறியதும்… சௌந்தர்யாவிடம் சென்று பத்திரிக்கையாளர் தேவ்ராஜ் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

உங்கள் மனம் புண்படும்படி ஏதாவது பேசி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என சொன்னவுடன் சௌந்தர்யா சகஜ நிலைக்கு மாறி தேவராஜ்க்கு நன்றி சொல்லி இருக்கிறார். இந்த தகவலை பத்திரிக்கையாளர் தேவராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

விஜயகாந்த் மற்றும் சௌந்தர்யா இருவரும் “சொக்கத்தங்கம்” திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிட்டது. இந்த சம்பவத்தை பார்த்தால் விஜயகாந்த் உண்மையிலேயே “சொக்கத்தங்கம்” தான் என பாராட்டி வருகிறார்கள் கேப்டனின் ரசிகர்கள்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!