கே-பாப் பாடகர் வீசங் மரணம்
கே-பாப் பாடகரும் பாடலாசிரியருமான வீசங்,திங்கள்கிழமை மாலை சியோலில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இறந்த நிலையில் காணப்பட்டார்.
இதையும் படியுங்க: கோப்பையை தூக்கி குப்பையில் வீசுங்கள்… முன்னாள் பாகிஸ்.வீரர் சர்ச்சை பேச்சு.!
தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் வெளியிட்ட தகவலின்படி,அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.வீசங்கின் ஏஜென்சியான டஜோய் என்டர்டெயின்மென்ட்,பாடகர் காலமானதை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கலைஞர் வீசங் தனது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இழப்பால் கலைஞர்களும் ஊழியர்களும் மிகுந்த துக்கத்தில் உள்ளனர் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.வீசங் 2002 ஆம் ஆண்டில் ‘லைக் எ மூவி’ என்ற R&B ஆல்பத்தின் மூலம் தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.அவர் R&B,பாப் மற்றும் ஹிப்-ஹாப் போன்ற இசை வகைகளை ஒன்றிணைத்து தனக்கே ஒரு தனிப்பட்ட இசை அடையாளத்தை உருவாக்கினார்.
ஆனால் 2021 ஆம் ஆண்டில், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சக்திவாய்ந்த மயக்க மருந்தான ப்ரோபோஃபோல் பயன்படுத்தியதற்காக அவர் தண்டிக்கப்பட்டார்.இதனால்,அவருக்கு இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. திங்கள்கிழமை மாலை 6:29 மணிக்கு,சியோலின் வடக்கு குவாங்ஜின்-கு மாவட்டத்தில் உள்ள அவரது குடியிருப்பில்,அவரது தாய் வீசங் அசைவில்லாமல் இருப்பதை கண்டுபிடித்தார்.
அதனைத் தொடர்ந்து அவசர சேவைப் பணியாளர்கள் அழைக்கப்பட்டனர்,ஆனால் அவரை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை. அன்றைய தினம் தனது மேலாளரை சந்திக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில்,அவரது கால்பேசி அணுக முடியாததால்,அவரது தாய் அவரைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தபோது, இந்தத் துயர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.தற்போது, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள், மேலும் அவரது மரணத்திற்கான காரணம் விரைவில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.