சன் டிவியில் பெண்களுக்கு அந்த மாதிரி டார்ச்சர் நடக்கும்.. உடம்பு கூசுது.. பகீர் கிளப்பிய செய்தி வாசிப்பாளர்..!

Author: Vignesh
5 April 2024, 7:06 pm

செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். தொழில் முனைவோர், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர், செய்தி வாசிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர் சவுதாமணி. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.

sowdha mani sun tv

அதில், தன்னுடைய கணவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக இறந்த சமயத்தில் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்ததாகவும், தான் வேலை செய்யும் இடத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள அனுகியதாகவும், ஆனால் தனக்கு இரண்டாம் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டதாகவும், தன்னுடைய வாழ்க்கை குழந்தைகளுக்காகவே இருக்க வேண்டும் முடிவு செய்துள்ளதாகவும், தன்னுடைய கணவர் மறைவுக்கு பின் தான் பணியாற்றும் இடத்தில் நீ என்ன கண்டுக்கவே மாட்டேன்ற என்று தலைமையாளர் ஜாடைமடையாக பேசி டார்ச்சர் கொடுத்ததாகவும், கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் படிக்க: நிறைமாத கர்ப்பிணியான அமலா பால்.. எளிமையாக நடந்த வளைகாப்பு.. அழகிய புகைப்படங்கள்..!..!

sowdha mani sun tv

மேலும் படிக்க: அரண்மனை போல இருக்கே.. ஹைதராபாத்தில் 3-வது வீடு வாங்கிய நடிகை ராஷி கண்ணா..!

மேலும், போனில் அழைத்து உன்னுடைய குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன். உன் செலவு எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியதாகவும், தனக்கு மட்டும் இந்த மாதிரி நடக்கவில்லை. அங்கு பணி செய்யும் பல பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை கொடுத்திருக்கிறார்கள். இப்போது, சன் டிவி என்றால் தனக்கு உடம்பெல்லாம் கூசும் அந்த அளவுக்கு அருவருப்பானவர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று சவுதாமணி தெரிவித்துள்ளார்.

  • fear was more when doing ajith project அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…