அரசியல் வசனங்களுடன் ஜனநாயகன்.. வெளியான மாஸ் அப்டேட்!

Author: Hariharasudhan
24 February 2025, 7:52 pm

தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விஜய் நடித்து வரும் 69வது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். ஜன நாயகன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் கவனம் பெற்றது. காரணம், அதில், விஜய் நெய்வேலியில் திரளான ரசிகர்கள் மத்தியில் எடுத்த செல்ஃபி போன்ற போஸ்டரும், எம்.ஜி.ஆர் பாணியில் சாட்டையை சுழற்றுவது போன்ற போஸ்டரும் வெளியானதால், ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்த நிலையில், தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி, ஜனநாயகன் படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் விஜய், சில அரசியல் கலந்த வசனங்களைப் பேசியபடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

VIjay Jananayagan Glimpse

காரணம், கடந்த ஆண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய விஜய், அக்டோபரில் கட்சியின் முதல் மாநில மாநாட்டையும் நடத்தி, தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றார். மேலும், 2026 தேர்தலை இலக்காகக் கொண்டுள்ள விஜயின் கடைசிப் படமாக இந்த ஜனநாயகன் இருக்கும் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தகுதியானவர்களின் மகளிர் உரிமைத் தொகையும் நிராகரிப்பு? கொந்தளிக்கும் பெண்கள்!

மேலும், சமீபத்தில் தான் அளித்த பேட்டியில் ஜனநாயகன் படப்பிடிப்பு குறித்து பேசிய நடிகை பிரியாமணி, “நான் விஜயின் தீவிர ரசிகை. அவரது காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகிவிட்டது. எனக்கும், அவருக்கும் உள்ள காம்பினேஷன் காட்சிகள் விரைவில் தொடங்க உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தில் புலி படத்துக்குப் பிறகு ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

  • Sardar 2 Music Director Change திடீரென விலகிய யுவன்…சர்தார் 2 படக்குழுவில் குழப்பம்.!