Squid Game 3 ரிலீஸ் தேதி.. நெட்பிளிக்ஸ் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
Author: Udayachandran RadhaKrishnan7 January 2025, 2:41 pm
கொரிய தொடர்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக ஸ்குவிட் கேம் தொடருக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அண்மையில் வெளியான ஸ்குவிட் கேம் 2 அமோக வரவேற்பை கொடுத்தது.
இதையும் படியுங்க: கணவரிடம் சிக்கி தவிக்கும் கொலு கொலு நடிகை…வாழ்க்கையும் போச்சு சினிமாவும் போச்சு..காரணம் அந்த நடிகர்கள் தான்..!
பாகம் 2ல் வெளியான சீரியஸில் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சி கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் ஸ்குவிட் கேம் 3 நிச்சயம் இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதை நடிகர் லீ ஜங் ஜே உறுதியும் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஸ்குவிட் கேம் 3 ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என்றும், ஆனால் உறுதிப்படுத்தாத தகவல் என்றும் கூறப்படுகிறது
கொரியாவில் உள்ள நெட்பிளிக்ஸ் இந்த தகவலை அளித்தாலும், ஸ்குவிட் கேம் படக்குழுவினர் இது குறித்து எந்த தகவலையும் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.