விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!
Author: Prasad14 April 2025, 1:40 pm
மனநலம் பாதிக்கப்பட்டதா?
“ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “மாநகரம்” போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்ரீ. “மாநகரம்” திரைப்படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து “இறுகப்பற்று” திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

இந்த நிலையில் சில நாட்களாக மிகவும் ஒல்லியான தோற்றத்தில் எலும்பும் தோலுமாக தென்படும் ஸ்ரீயின் புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவேற்றியுள்ள புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்கையில் அவரது மனநிலை பாதிப்படைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆபாசமான வீடியோ ஒன்றையும் அவர் பதிவேற்றியிருந்தார்.

மேலும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் “இறுகப்பற்று” திரைப்படத்தில் நடித்ததற்கு இன்னும் சம்பள பாக்கி இருப்பதாக தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவை கடுமையாக சாடியிருந்தார். இதனை தொடர்ந்து எஸ்.ஆர்.பிரபுவை பலரும் விமர்சித்து வந்தனர்.
அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்…
இந்த நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது “X” தளத்தில் இது குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், “நடிகர் ஸ்ரீயின் உடல் நலனில் நாங்கள் முழு அக்கறைக் கொண்டுள்ளோம். அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கைக்கோர்த்து நாங்கள் அவரை தொடர்புகொள்ள வெகு காலமாக முயன்று வருகிறோம். ஆனால் அதற்குள் துர்திஷ்டவசமாக ஊகங்கள் கிளம்பிவிட்டன. எனினும் ஸ்ரீயை மீட்டுக்கொண்டு வருவதுதான் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று” என கூறியுள்ள அவர்,

“அதற்கிடையில் எந்த உண்மையும் அறியாமல் தேவையில்லாமல் கம்மெண்ட் அடிப்பவர்கள் go f_< yourself” என்று காட்டமாக வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். எஸ்.ஆர்.பிரபுவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Btw to anyone making comments/ stories without knowing the facts, and the creatures making use of his vulnerability and squeaking in my timelines go f_<€ yourself
— SR Prabu (@prabhu_sr) April 14, 2025
