கடந்த ஒரு வார காலமாகவே மலையாள சினிமாவில் பாலியல் தொல்லைகளும் அதன் புகார்களும் தலைவிரித்து ஆடி வருகிறது. இதை அடுத்து பல முக்கிய பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் மோகன் லால் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மலையாள சினிமா நிர்வாகிகள் கூண்டோடு நேற்று ராஜினாமா செய்து விட்டனர்.
மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரேவதி சம்பத் உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து அதிர்ச்சி கிளப்பி வருகிறார்கள் .அந்த வகையில் தற்போது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல பிரபல நடிகர் விஷால் இச்சம்பவம் குறித்து பேத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
கேரளா சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு சினிமா வாய்ப்புக்காக நடிகையிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பவர்களை செருப்பால் அடியுங்கள். கேரளாவை போல தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்ற குழு இன்னும் சில நாட்களில் அமைக்கப்பட்டு விடும் என நடிகர் விஷால் அதிரடியாக பதில் கொடுத்தார்.
இந்நிலையில் விஷாலின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி வணக்கம் mr. பெண்களை விரும்புபவரே!! வெள்ளை முடி… மிகவும் வயதான மாமா, நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றி பேசும் போது, உங்கள் நாக்கு ஊடகங்களுக்கு முன்னால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
உலகத்துக்கே தெரியும் நீ எவ்வளவு பெரிய பிராடுன்னு…அதை நீங்கள் ஏற்கனவே பலமுறை நிரூபித்துள்ளீர்கள். உன்னை ஜெண்டில்மேன் என்று மக்கள் நம்புவார்கள் என்று நினைக்காதே. உன் வாழ்க்கையில் இருந்த பெண்கள் உன் திருமண நிச்சயதார்த்தம் நின்றுபோனது எல்லாம் ஏன் என்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. உன் வாழ்க்கையில் கர்மா ஏற்கனவே நன்றாக வேலை செய்கிறது. என்னிடம் நிறைய செருப்புகள் இருக்கின்றன. அதில் ஒன்று உனக்கு வேண்டுமா?” என கடுமையாக திட்டி ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.