தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து தனக்கு என மிகப்பெரிய சாம்ராஜியத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்யை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள், தயாரிப்பாளர் ஆவலோடு காத்திருந்து வருகிறார்கள். அதேபோல் நடிகைகளும் விஜய்யுடன் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள். அப்படி முக்கிய ரோலில் விஜய்க்கு ஓகே சொல்லிய நடிகையை பற்றி விஜய்யின் பிஆர்ஓ-வாக பணியாற்றி தயாரிப்பாளரான பிடி. செல்வகுமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன் துபாய் ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் புலி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அப்படத்திற்கு முன் ஸ்ரீதேவி எந்த படத்தில் நடிக்கபோவதில்லை என்று தெரிந்வித்து தன்னை தேடி வருபவர்களிடம் சொல்லி அனுப்பி வைத்து வந்தாராம். அப்படி ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு கூட, ஸ்ரீதேவியை அவரே சென்று கூப்பிட்டு கால்ஷீட் கேட்ட போது, ரஜினி அழைத்தும் நான் நடிக்க மாட்டேன் என்ற குறிக்கோளுடன் இருந்தாராம்.
அப்படியிருக்கையில் மும்பைக்கு சென்று நடிகை ஸ்ரீதேவியிடம் புலி படத்தில் நடிக்க பிடி. செல்வகுமார் கேட்டுள்ளார். அங்கு அவரை சந்தித்து, ஸ்ரீதேவியை பற்றி புகழ்ந்தும் உங்களின் தீவிர ரசிகர் என்றும் கூறியும், ஓகே செய்துள்ளார்.
மேலும் விஜய் படத்தில் நடிக்க சில கண்டீசன்கள் போட்டு ஸ்ரீதேவியும் நடிக்க ஒப்புக்கொண்டார். ரஜினிகாந்த் படத்திற்கே ஓகே சொல்லாத ஸ்ரீதேவி, விஜய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது தளபதி ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கிறது என்று கருத்துக்களை அந்த பேட்டி வீடியோவில் பிடி. செல்வகுமார் பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.