எனக்கு ஒன்னு வேணும்னா வேணும்…. பேட்டியின் நடுவே நீலாம்பரியா மாறிய ஸ்ரீதேவி!

Author: Rajesh
31 January 2024, 9:34 am

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளும் நடிகையுமான ஸ்ரீதேவி 1992இல் ரிக்சா மாமா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் ராகுல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

sridevi vijaykumar-updatenews360

திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன ஸ்ரீதேவி 37 வயதாகியும் இளமை மாறாமல் இன்னும் அதே அழகோடு இருந்து வருகிறார். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குடும்பத்தை பற்றிய விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.

Sridevi Vijayakumar- updatenews360

அதாவது, சின்ன வயசில் இருந்தே வீட்டில் எல்லோரும் என்னை மிகவும் பாசமாக பார்ப்பார்கள். நான் அடம்பிடித்தால் என்னவேனாலும் செய்துவிடுவார்கள். எனக்கு ஒன்னு வேணும்னா வேணும் என்று அடம்பிடித்து சாதிப்பேன். ஆனால், அது நியமானதாக தான் இருக்கும். வீட்லயே அண்ணா, அக்கா எல்லாரும் சொல்லுவாங்க ஏன் அந்த பொண்ணுக்கு இவ்ளோவ் செல்லம் கொடுக்குறீங்க…. நீங்களே கெடுக்குறீங்க அவளன்னு சொல்லுவாங்க. ஆனால், பெரியவள் ஆனதும் அப்படியெல்லாம் பண்றதில்ல ரொம்ப ஸ்வீட் ஆகிட்டேன் என ஸ்ரீதேவி கூறினார்.

https://www.youtube.com/shorts/DfgkXEsRTYY
  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 301

    0

    0