வாங்க ஒரு கட்டிங் போடுங்க.. குடிபோதையில் குதூகல குத்தாட்டம் போட்ட இளம் நடிகை..!
Author: Vignesh27 February 2024, 12:57 pm
தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் குழந்தை நட்சத்திரமாக மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஸ்ரீ திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பிளாப் ஆனதால் பிறகு 2012 இல் மாருதி இயக்கிய “பஸ் ஸ்டாப்” படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது. அதன் பின்னர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர்.
இதனிடையே, கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இமான் அண்ணாச்சி கிரகபிரவேசதில் ஓவராக மது அருந்திவிட்டு தலைகால் புரியாமல் மதுபோதையில் முகம் சுளிக்கப்படி மோசமாக ஆட்டம் போட்டுள்ளார். அங்கிருந்த பலர் எடுத்து கூறியும் கேட்காத ஸ்ரீ திவ்யாவின் போதை தெளியவைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த செய்தி காட்டுத்தீயாக பரவி கோலிவுட் சினிமா ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இதனால் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவரும் சில ஆண்டுகள் வாய்ப்பு தேடி அலைத்துள்ளார். பின்னர், போட்டோ ஷூட் நடத்தியும் பார்த்தார் ஆனால் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை. இதனால் சொந்த கிராமத்திற்கு பொட்டி படுக்கையுடன் சென்று ஆடு, மாடு, கோழி என சிம்பிளான கிராமத்து வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், ஸ்ரீதிவ்யா குறித்து ஒரு செய்தி சினிமா வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகிறது. அதாவது, ஸ்ரீதிவ்யாவை வாரிசு நடிகர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததாகவும், ஆனால் அதற்கு ஸ்ரீதிவ்யா மறுத்துவிட்டதாகவும், கோபத்தில் அந்த வாரிசு நடிகர் ஸ்ரீதிவ்யா குறித்து பொய்யான விஷயங்களை கூறி மார்க்கெட்டை காலி செய்து விட்டாராம். இதனால், மன உளைச்சல் அடைந்த இவர் தனது சொந்த ஊரிலே சில வருடங்கள் செட்டில் ஆகி விட்டாராம். இதையடுத்து, ஸ்ரீதிவ்யாவிற்கு சுத்தமாகவே பட வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும், பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதிவ்யா தற்போது, விக்ரம் பிரபுவுடன் ரைடு படத்தில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, நடிகை ஸ்ரீதிவ்யா குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, பார்ட்டி ஒன்றில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட வீடியோ வைரலானதாகவும், இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் எதுவுமே இந்த போனை குடிக்காது என்று பார்த்தால் அவர் வீடியோ வைரலாகிவிட்டது. பணமும் புகழும் சேரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் அப்படி ஒரு விஷயத்தை அவர் செய்துவிட்டார்.
நான் விசாரித்ததில் வளர்ந்து வந்த போது ஒரு சதி வலையில் சிக்கியதுதான் ஸ்ரீதிவ்யாவின் புகழை தவிர்க்க நேர்ந்தது. அடுத்தடுத்த, படங்கள் ஹிட் ஆகும்போது உங்களின் டிமாண்ட் அதிகமாகிறது. அப்போது, சரியான அனுபவம் வாய்ந்தவர்களான மேனேஜர் அவர்களை காப்பாற்றுவார். நடிகைகளுக்கே சுய கட்டுப்பாடு வேண்டும் வாங்க ஒரு கட்டிங் போடுங்க என்று சிலர் கேட்பார்கள். அதற்கெல்லாம் போகக்கூடாது எப்போதும் சரியாக இருக்க வேண்டும். அப்பவே நடிகைகள் எல்லாம் குடிக்கிறார்கள் என்ற பெயர் இருந்தது.
இப்படி இவர் பார்ட்டியில், கலந்து கொண்டதுதான் ஒரு அசோசியேட் என்னிடம் வீடியோவை காண்பித்து இதுதான் நடந்தது என்று கூறினார் என்று செய்யாறு பாலு தெரிவித்தார். அந்த சம்பவம் தான் ஸ்ரீதிவ்யா காணாமல் போக காரணம். ஸ்ரீதிவ்யாவின் அக்கா ஸ்ரீ ரம்யா விருது படத்தில் நடித்தார். ஆனால், கமர்சியல் படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீ திவ்யா. இதற்கு இடையில், வந்து டாப் இடத்தினை பிடித்தவர் கீர்த்தி சுரேஷ். ஸ்ரீதிவ்யா மார்க்கெட் போய்விட்டது உண்மைதான். ஸ்ரீதிவ்யா விட்ட இடைவெளி தான் கீர்த்தி சுரேஷ் மேலே வர காரணமானது. ஒரே ஒரு பார்ட்டி ஒரே ஒரு கட்டிங் தான் ஸ்ரீதிவ்யாவின் வாழ்க்கையை காலி செய்தது இது தேவையா என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.