கோலிவுட்டில் கம்பேக் கொடுத்தும் ஒர்க் அவுட் ஆகல.. ஶ்ரீதிவ்யா எடுத்த அதிரடி முடிவு..!

Author: Vignesh
17 February 2024, 4:21 pm

தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் குழந்தை நட்சத்திரமாக மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.

தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஸ்ரீ திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பிளாப் ஆனதால் பிறகு 2012 இல் மாருதி இயக்கிய “பஸ் ஸ்டாப்” படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது.

அதன் பின்னர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். முதல் படத்திலே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்தார்.

பிறகு பென்சில் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார்.மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார். நல்ல பீக்கில் இருந்தபோது அம்மணி சினிமா வாழ்க்கையை தானே அழித்துக்கொண்டார்.

ஆம், கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இமான் அண்ணாச்சி கிரகபிரவேசதில் ஓவராக மது அருந்திவிட்டு தலைகால் புரியாமல் மதுபோதையில் முகம் சுளிக்கப்படி மோசமாக ஆட்டம் போட்டுள்ளார். அங்கிருந்த பலர் எடுத்து கூறியும் கேட்காத ஸ்ரீ திவ்யாவின் போதை தெளியவைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து, ஸ்ரீதிவ்யாவிற்கு படவாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் அவரை ரசிகர்கள் இன்னும் மறக்கவே இல்லை. அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தனது கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஸ்ரீதிவ்யா பார்த்து ரசிகர்கள் நீங்கள் மீண்டும் எப்போ நடிப்பீங்க என கேட்டு வருகிறார்கள்.

sri-divya

இந்நிலையில், சினிமாவில் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க திட்டமிட்டு இருக்கும் ஸ்ரீதிவ்யாவிற்கு 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கார்த்திக் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது.

sri-divya

ஆனால், இந்த படத்தில் கார்த்திக் ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்க இருப்பதாக முன்பு கூறப்பட்ட நிலையில், தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் அந்த படத்தில் கார்த்திக் ஜோடியாக நடிக்கவில்லையாம். அவருடைய தங்கையாக நடிக்க உள்ளாராம். அதனால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்போது, வாய்ப்புகள் குறைந்த நிலையில், அக்கா தங்கை என குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 363

    0

    0